/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மவுலிவாக்கம் - மாங்காடு சாலை விரிவாக்கம் அவசியம்
/
மவுலிவாக்கம் - மாங்காடு சாலை விரிவாக்கம் அவசியம்
ADDED : பிப் 23, 2024 12:42 AM

குன்றத்துார், போரூர் அருகே மவுலிவாக்கத்தில் இருந்து பரணிபுத்துார் வழியாக, மாங்காடு செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. 4.2 கி.மீ., துாரம் உடைய இந்த சாலையானது, போரூர் - குன்றத்துார் நெடுஞ்சாலையையும், குன்றத்துார் - குமணன்சாவடி நெடுஞ்சாலையையும் இணைக்கிறது.
இந்த சாலை வழியே கோவூர், அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார், பட்டூர், மாங்காடு, பூந்தமல்லி, மவுலிவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, ஏராளமான வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த சாலை குறுகலாகவும், சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த சாலையை அகலப்படுத்தி, சீரமைக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.