/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 இடங்களில் கண் மருத்துவமனை அமைத்தது 'மேக்ஸிவிஷன்' குழுமம்
/
10 இடங்களில் கண் மருத்துவமனை அமைத்தது 'மேக்ஸிவிஷன்' குழுமம்
10 இடங்களில் கண் மருத்துவமனை அமைத்தது 'மேக்ஸிவிஷன்' குழுமம்
10 இடங்களில் கண் மருத்துவமனை அமைத்தது 'மேக்ஸிவிஷன்' குழுமம்
ADDED : ஆக 02, 2025 12:20 AM
சென்னை, 'மேக்ஸிவிஷன்' மருத்துவ குழுமம், சென்னையில் 10 இடங்களில், கண் மருத்துவமனைகளை அமைத்துள்ளது.
இதுகுறித்து, மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை குழும தலைவர் ஜி.எஸ்.கே.வேலு கூறியதாவது:
மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், 65க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், 30க்கும் மேற்பட்ட கண் சிகிச்சை மையங்களை கொண்டுள்ளது.
தற்போது சென்னையில், இரண்டு பல்நோக்கு மருத்துவமனைகள், எட்டு கண் சிகிச்சை மையங்கள் என, 10 மருத்துவ மனைகளை, 100 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கியுள்ளது.
இதில், அண்ணா நகரில் உள்ள மேக்ஸிவிஷன் மருத்துவமனையை, இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி துவக்கி வைக்க உள்ளார். மற்ற ஒன்பது மருத்துவமனைகளும், இன்று முதல் செயல்பாட்டிற்கு வரும்.
இந்த மருத்துவமனைகளில், கண்புரை, விழித் திரை, க்ளோகோமா, பார்வை கோளாறுகள் உள்ளிட்டவற்றிற்கு நவீன தொழில்நுட்பத்தில் சிகிச்சைகள் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் ஷிபு வர்க்கே கூறுகையில், ''கொரோனாவுக்கு பின், கண் பார்வை பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் உடனடியாக கண் மருத்துவ மையத்தை அணுகும் வகையில், அனைத்து பகுதிகளிலும் பரவ லா க கண் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.
''நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் கண் பார்வை பாதிப்பை, ஆரம்ப நிலை பரிசோதனையில் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.