/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணக்கெடுக்க அனுமதி கொடுங்க மயிலை எம்.எல்.ஏ., கெஞ்சல்
/
கணக்கெடுக்க அனுமதி கொடுங்க மயிலை எம்.எல்.ஏ., கெஞ்சல்
கணக்கெடுக்க அனுமதி கொடுங்க மயிலை எம்.எல்.ஏ., கெஞ்சல்
கணக்கெடுக்க அனுமதி கொடுங்க மயிலை எம்.எல்.ஏ., கெஞ்சல்
ADDED : டிச 18, 2024 12:26 AM

சென்னை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் மக்களுடன், மயிலாப்பூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது அப்பகுதிமக்கள் பழைய குடியிருப்பை இடிக்கும் முன் தற்காலிக வீடுகளை ஒதுக்கி தர வேண்டும். இங்குள்ள அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். இருக்கும் இடத்திலேயே புதிய வீடு கட்டி தர வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்கள் முன், எம்.எல்.ஏ., வேலு கூறியதாவது:
முதல்வர் ஆணைக்கு இணங்க தற்போது குடியிருப்புகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டு வருகிறோம். பட்டினப்பாக்கம்நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிப்பவர்கள் மட்டுமின்றி இங்குள்ள அனைத்து தரப்பினருக்கும் பழைய வீட்டை இடித்து விட்டு அங்கேயே புதிய வீடு கட்டி தர வேண்டும் என, சட்டசபையில் பேசினேன்.
முதல்வர், சீனிவாசபுரத்தில் உள்ளவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே வீடு கட்டலாம் எனக் கூறினார். இங்கு வசிப்பவர்கள் யாரையும் செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் பகுதிகளுக்கு அனுப்ப மாட்டோம்.
கணக்கெடுக்க அனுமதி கொடுங்கள். அப்போது தான் எத்தனை வீடுகள் கட்ட வேண்டும் எவ்வளவு இடம் வேண்டும் என்பது குறித்து திட்டமிட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.