தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ‘பர்கர்’ சாப்பிட்டாலும், ‘பாப்’ வெட்டினாலும் சர்ச்சை மேயர் பிரியா ஆதங்கம

‘பர்கர்’ சாப்பிட்டாலும், ‘பாப்’ வெட்டினாலும் சர்ச்சை மேயர் பிரியா ஆதங்கம

‘பர்கர்’ சாப்பிட்டாலும், ‘பாப்’ வெட்டினாலும் சர்ச்சை மேயர் பிரியா ஆதங்கம


ADDED : செப் 26, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 04:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், நேற்று முன்தினம் நடந்த கவுன்சில் கூட்டத்தில், த.வெ.க., அரசையும், முதல்வர் விஜயையும் மேயர் பிரியா விமர்சித்திருந்தார். இதற்கிடையே, அவர் முடி வெட்டிக்கொண்டது குறித்து, சமூக வலைதளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.

இதுகுறித்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி, மேயர் பிரியா வெளியிட்ட அறிக்கை:

நான் மேயராக பொறுபேற்ற முதல் நாளில் இருந்து தற்போது வரை, தான் செய்யும் எதுவாக இருந்தாலும் சர்ச்சையாகி வருவதுடன், சிறிய பிரச்னையாக இருந்தாலும் பெரிதாக்கப்படுகிறது. ‘பர்கர்’ சாப்பிட்டாலும், ‘பாப்’ கட்டிங் முடி வெட்டிக்கொண்டாலும் பிரச்னையாகிறது. என் தனிப்பட்ட விருப்பங்கள் கூட கேள்விக்கு உட்படுத்தப்பட்டு ஆராயப்படுவதாக தெரிகிறது.

நான் ஒரு பெண் என்பதாலோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ இவ்வாறு நடக்கிறதா என சில நேரங்களில் தோன்றுகிறது. நான் சார்ந்த பிரச்னைகளில் மட்டும் பெண்ணியவாதிகளும், பெண்களுக்காக குரல் கொடுப்பதாக கூறுபவர்களும் எங்கே மறைந்து விடுகின்றனர் என்பது தெரியவில்லை.

அரசியலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ, மரியாதைக்கு தகுதியற்றவர்களோ அல்ல. பொதுவாழ்வில் இருக்கும் பெண்ணை, அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் மதிப்பிட யாருக்கும் உரிமை இல்லை.

ஒவ்வொரு பெண்ணுக்கும் அவருக்கே உரிய கண்ணியம், சுயமரியாதை உள்ளது. என் வாழ்க்கையை என் விருப்பப்படி அமைத்துக்கொள்ளும் உரிமையும் உள்ளது. எனவே, மேயர் என்ற பதவியை தாண்டி, அந்த பெண்ணையும் மதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us