நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-
கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள விருகம்பாக்கம் கால்வாய், செடி, கொடிகள் வளர்ந்து மண் திட்டாக உள்ளதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கால்வாயில் நடந்து வரும் துார் வாரும் பணியை, மேயர் பிரியா நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'நீர்வளத் துறை பராமரிப்பில் இருந்த, ஓட்டேரி நல்லா கால்வாய், வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை, சென்னை மாநகராட்சி வசம், சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, துார்வாரும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.