/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஆர்.எப்., பள்ளி கிரிக்கெட் வெற்றியுடன் துவங்கிய எம்.சி.சி.,
/
எம்.ஆர்.எப்., பள்ளி கிரிக்கெட் வெற்றியுடன் துவங்கிய எம்.சி.சி.,
எம்.ஆர்.எப்., பள்ளி கிரிக்கெட் வெற்றியுடன் துவங்கிய எம்.சி.சி.,
எம்.ஆர்.எப்., பள்ளி கிரிக்கெட் வெற்றியுடன் துவங்கிய எம்.சி.சி.,
ADDED : ஜூலை 09, 2025 12:11 AM
சென்னை, எம்.ஆர்.எப்., பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், எம்.சி.சி., பள்ளி அணி வெற்றியுடன் துவங்கியுள்ளது.
எம்.சி.சி., பள்ளி மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, நேற்று சேத்துப்பட்டில் துவங்கியது.
இதில், பி.எஸ்.பி.பி., நெல்லை நாடார், சர் முத்தா, டி.ஏ.வி., - டான்போஸ்கோ உள்ளிட்ட, 24 அணிகள் பங்கேற்றுள்ளன. அணிகள், இரு பிரிவுகளாக பிரித்து, 'நாக் அவுட்' முறையில் மோதுகின்றன.
நேற்று காலையில் துவங்கிய முதல் போட்டியை, எம்.சி.சி., பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபதாஸ் தினகரன் துவங்கி வைத்தார். முதல் போட்டியில், எம்.சி.சி., மெட்ரிக் மற்றும் டவ்டன் பாய்ஸ் பள்ளி அணிகள் எதிர்கொண்டன.
டாஸ் வென்ற டவ்டன் பாய்ஸ் பள்ளி அணி, முதலில் பேட்டிங் செய்து, 13.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 53 ரன்களில் சுருண்டது.
அடுத்து பேட்டிங் செய்த எம்.சி.சி., மெட்ரிக் பள்ளி, 5 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி, 54 ரன்களை அடித்து, முதல் போட்டியை வெற்றியுடன் துவங்கியது. போட்டிகள், தொடர்ந்து 14ம் தேதி வரை நடக்கின்றன.