/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.சி.சி., மாநில கால்பந்து 12 பள்ளிகள் பலப்பரீட்சை
/
எம்.சி.சி., மாநில கால்பந்து 12 பள்ளிகள் பலப்பரீட்சை
எம்.சி.சி., மாநில கால்பந்து 12 பள்ளிகள் பலப்பரீட்சை
எம்.சி.சி., மாநில கால்பந்து 12 பள்ளிகள் பலப்பரீட்சை
ADDED : ஜூலை 04, 2025 12:34 AM

சென்னை, சேத்துப்பட்டில் துவங்கிய பள்ளிகளுக்கு இடையிலான மாநில கால்பந்து போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 12 அணிகள் பங்கேற்றுள்ளன.எம்.சி.சி., பள்ளி, எம்.ஆர்.எப்., நிறுவனம் இணைந்து, பள்ளி அளவிலான மாநில கால்பந்து போட்டியை, சேத்துப்பட்டு பள்ளியில் நேற்று துவக்கின.
இதில், சென்னை, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 12 அணிகள் பங்கேற்றுள்ன. போட்டிகள், லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடக்கின்றன.
நேற்று காலை துவங்கிய முதல் நாள் போட்டியை, 'புட்பால் பிளஸ்' அகாடமியின் தலைமை பயிற்சியாளர் ஜெர்மன் டி மாஸ்ட்ரீ, எம்.சி.சி., பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் ஜெபதாஸ் தினகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முதல் போட்டியில், திருவள்ளூர் வேலம்மாள் அணி, 1 - 0 என்ற கணக்கில் துாத்துக்குடி எல்.கே., அணியையும், திண்டுக்கல் செயின்ட் மேரிஸ் அணி, 2 - 1 என்ற கணக்கில் சென்னை எம்.சி.சி., பள்ளி அணியையும் தோற்கடித்தன.
மற்ற போட்டியில், பெரம்பூர் டான்பாஸ்கோ அணி, 2 - 1 என்ற கணக்கில் தஞ்சை அரசு பள்ளியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நாளை வரை நடக்கின்றன.