/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெருநாய்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை
/
தெருநாய்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை
ADDED : ஜன 24, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், மத்திய கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள அமைச்சக கமிஷனர் அபிஜித் மித்ராவுடன், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில், சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள், மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழக துணைவேந்தர் செல்வகுமார், மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

