/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நர்ஸிடம் ஆபாசமாக பேசிய மெக்கானிக் கைது
/
நர்ஸிடம் ஆபாசமாக பேசிய மெக்கானிக் கைது
ADDED : ஆக 29, 2025 12:17 AM
ஏழுகிணறு, நர்ஸிடம் ஆபாசமாக பேசிய மெக்கானிக்கை, போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த 39 வயது பெண், பெரம்பூரில் உள்ள விடுதியில் தங்கி, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார்.
நேற்று முன்தினம், ஏழுகிணறு பகுதியில் நடந்து சென்ற போது, வாலிபர் ஒருவர், அவரின் கையை பிடித்து இழுத்து, ஆபாசமாக பேசியுள்ளார். இது குறித்து, அப்பெண் ஏழு கிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த வசந்த், 26, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், தென்காசி, குருக்கள்பட்டியில் அப்பெண் செவிலியராக பணிபுரிந்தபோது, அங்கு வசந்த் மெக்கானிக் கடை நடத்தி வந்ததும், அப்பெண்ணை பின்தொடர்ந்து, தொந்தரவு செய்ததும் தெரியவந்தது.
விசாரணைக்கு பின், வசந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.