ADDED : ஏப் 08, 2026 04:21 PM

மடிப்பாக்கம்: இரண்டு இருசக்கர வாகனங்களை திருடிய மெக்கானிக்கை, மடிப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
மடிப்பாக்கத்தில், இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் சிவசங்கரன், 49, என்பவர், தான் வாங்கிய 'என் டோர்க்' வாகனத்தை, கீழ்கட்டளை, பாலமுருகன் தெருவில் உள்ள, 'மெக்கானிக்' கடையில், ஜன., 1ம் தேதி நிறுத்தியிருந்தார். அந்த வாகனம் திருடுபோனது.
அதேபோல், ஷோபா கடையில் வேலை செய்து வரும் கீழ்கட்டளை, அன்பு நகரைச் சேர்ந்த அப்துல்கரீம், 57, என்பவர், வீட்டின் முன் நிறுத்தியிருந்த 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரும், ஜன., 9ல் திருடுபோனது.
மடிப்பாக்கம் போலீசார் விசாரணையில், இரு வாகனங்களையும் திருடியது, பல்லாவரத்தைச் சேர்ந்த ஆபேத் உசேன், 33, என தெரிந்து, அவரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
மெக்கானிக் வேலை செய்யும் ஆபேத் உசேனிடம் இருந்து, ஆக்டிவா மற்றும் என் டோர்க் வாகனத்தின் உதிரி பாகங்களை மீட்டனர்.
