ADDED : டிச 29, 2025 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளங்கலை நர்சிங் முடித்த மாணவ - மாணவியருக்கு, இணையவழி மருத்துவ நிர்வாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தாட்கோ மற்றும் 'அப்பல்லோ மெட் ஸ்கில்ஸ்' நிறுவனம் இணைந்து நடத்தும் இப்பயிற்சிக்கு ஊக்கத்தொகையாக, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ளோர் தாட்கோவின் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

