ADDED : பிப் 23, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி, சென்னை, மணலி, ஜலகண்ட மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள காவலர் குடியிருப்பில், ஆய்வாளர் சுந்தர் ஏற்பாட்டில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் கண், இரத்த அழுத்தம், நீரிழிவு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
அதன்படி, மணலி காவல் துறையில் பணியாற்றும், 49 போலீசார், காவலர் குடியிருப்பில் வசிக்கும், 150க்கும் மேற்பட்ட போலீசாரின் குடும்பத்தினர் பங்கேற்று, இலவச சிகிச்சை பெற்றனர்.