/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.16.80 லட்சம் மதிப்பிலான 'மெத் ஆம்பெட்டமைன்' பறிமுதல்
/
ரூ.16.80 லட்சம் மதிப்பிலான 'மெத் ஆம்பெட்டமைன்' பறிமுதல்
ரூ.16.80 லட்சம் மதிப்பிலான 'மெத் ஆம்பெட்டமைன்' பறிமுதல்
ரூ.16.80 லட்சம் மதிப்பிலான 'மெத் ஆம்பெட்டமைன்' பறிமுதல்
ADDED : ஜன 20, 2024 12:50 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் அருகே, 'மெத் ஆம்பெட்டமைன்' போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே, போலீசார் அவர்களை சோதனையிட்டனர்.
இதில், விலையுயர்ந்த போதை பொருளான, 'மெத் ஆம்பெட்டமைன்' இருப்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவல்படி, காசிமேடு, ஏ.ஜே., காலனி, வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
அதன்படி, 4.8 கிலோ மெத் ஆம்பெட்டமைன் போதை பொருட்கள், 'யமகா' இரு சக்கர வாகனம், ஒன்றரை அடி நீளமுள்ள பட்டாக்கத்தி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு, 16.80 லட்சம் ரூபாய்.
தொடர்புடைய, திருவொற்றியூர், கணக்கர் தெருவைச் சேர்ந்த ராஜா, 19, பட்டினத்தார் கோவில் தெருவைச் சேர்ந்த தனுஷ், 18, சுங்கச்சாவடியைச் சேர்ந்த சுஹேல் அகமது, 20, காசிமேடு, ஏ.ஜே.காலனியைச் சேர்ந்த யாசின், 21, ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.
விசாரணைக்கு பின், நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.