ADDED : மார் 29, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
துரைப்பாக்கம்: ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கத்தில், மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, பணித்தளத்தில் வைத்திருந்த, 80 கிலோ இரும்பு கம்பிகளை, ஒரு நபர் திருடினார்.
அங்கிருந்த ஊழியர்கள் அந்த நபரை பிடித்து, துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், கண்ணகி நகரை சேர்ந்த ராஜன், 28, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், இரும்பு கம்பிகள் மற்றும் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
