/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ரெடிமிக்ஸ் கான்கிரீட்' லாரிகளுக்கு நேர கட்டுப்பாடு மெட்ரோ ரயில் நிறுவனம் ஆட்சேபம்

ADDED : அக் 23, 2025 12:42 AM
சென்னை: சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையாக, 'ரெடிமிக்ஸ் கான்கிரீட்' வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு, மெட்ரோ ரயில் நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தற்போது மூன்று வழித்தடங்களில், மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இவற்றில், சுரங்க ரயில் நிலையங்கள் அமைப்பது, சுரங்க இணைப்பு போன்ற பணிகளுக்கு, ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை பயன்படுத்தப்படுகிறது.
புறநகரில் இதற்கான ஆலைகள் அமைத்து, ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை லாரிகளில் எடுத்து வரப்படுகிறது. குறிப்பாக, போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் இந்த லாரிகள் சென்னைக்குள் வருவதால் நெரிசல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தலைமை செயலர் முருகானந்தம் முன்னிலையில் நடந்த உயரதிகாரிகள் கூட்டத்தில், இந்த பிரச்னை எழுப்பப்பட்டது. பகல் நேரங்களில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் லாரிகள் வந்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசிக்கப் பட்டது.
அப்போது, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.
'ரெடிமிக்ஸ் லாரிகளை, மொத்தமாக தடை செய்வதால் மெட்ரோ ரயில் பணிகள் பாதிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களை தவிர்த்து, பிற சமயங்களில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் லாரிகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டது.