தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மெட்ரோ ரயில்: பொதுமக்கள் பேட்டி

மெட்ரோ ரயில்: பொதுமக்கள் பேட்டி

மெட்ரோ ரயில்: பொதுமக்கள் பேட்டி


UPDATED : அக் 11, 2026 09:53 PM

ADDED : அக் 11, 2026 09:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 09:53 PM ADDED : அக் 11, 2026 09:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெரிசலில் சிக்க வேண்டாம்


பூந்தமல்லி, போரூர், வடபழனி சாலையில் எப்போதும், நெரிசல் அதிகமாகவே இருக்கும். இந்த வழியே பைக், கார் என எந்த வாகனத்தில் சென்றாலும் பயண நேரம் அதிகமாகும். தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால், நெரிசலின்றி எளிதாக பயணிக்க முடியும். மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதற்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி-.
- லட்சுமண ராவ், 59,
முகலிவாக்கம்



பூந்தமல்லியில் இருந்து மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. மெட்ரோ ரயிலில் முதல் முறையாக பயணித்தேன். பல்வேறு தொழில்நுட்பத்துடன், கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன், மெட்ரோ ரயில்கள் சிறப்பாக இயக்கப்படுகின்றன. பூந்தமல்லியில் இருந்து அனைத்து பகுதிகளிலும், மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
- அபிநயா, 18,
கல்லுாரி மாணவி, பூந்தமல்லி.


திருமழிசையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அடிக்கடி செல்வேன். போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சரியான நேரத்திற்கு செல்ல முடியாது. தற்போது பூந்தமல்லி- - -வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதால் வடபழனி சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயிலில் விமான நிலையத்திற்கு எளிதாக செல்ல முடியும்; போக்குவரத்து நேரமும் குறையும்.
- செந்தில்குமார், 51,
- ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன்
திருமழிசை.


வேதனை நீங்கியது


போக்குவரத்து நெரிசல் காரணமாக, பூந்தமல்லியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் பயணிக்க, நரக வேதனையாக இருக்கும். பேருந்தில் கூட்ட நெரிசலில் நீண்ட நேரம் பயணித்த நிலையில், இனி மேட்ரோ ரயிலில் 'ஏசி' பெட்டிகளில் குளு குளு என மகிழ்ச்சியாக பயணிக்க முடியும். மெட்ரோ சேவையை மனதார வரவேற்கிறேன்.
- உமா மகேஸ்வரி, 42,
பூந்தமல்லி.



மெட்ரோ ரயில் சேவை தொடங்கியிருப்பதால், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் குறைந்த நேரத்தில் பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணம் செய்ய முடியும். பெண்கள் மற்றும் முதியோருக்கு, இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மெட்ரோ நிலையத்திலிருந்து பேருந்து உள்ளிட்ட பிற போக்குவரத்து வசதிகளையும் இணைத்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக எங்கள் பகுதியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
- ரஞ்சனி, 18, கல்லுாரி மாணவி, திருமழிசை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us