/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்ட்ரல் - பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
/
சென்ட்ரல் - பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
சென்ட்ரல் - பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
சென்ட்ரல் - பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
ADDED : ஏப் 22, 2025 12:47 AM
சென்னை, சென்னையில், விமான நிலையம் - விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வரையும் என, இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில், தினமும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். காலை, மாலை அலுவலக நேரங்களில், பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதற்கிடையே, சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை தடத்தில், நேற்று காலை 9:00 மணிக்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இருப்பினும், மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படவில்லை.
மாறாக, இந்த தடத்தில் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. ஒரு வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் மாறி, மாறி இயக்கியதால், சேவை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்கள், 40 நிமிடம் போராடி தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்தனர். அதன்பின், மெட்ரோ ரயில்கள் நேற்று காலை 9:40 மணி முதல் வழக்கம் போல் இயங்கின.