/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் பணி போக்குவரத்து மாற்றம்
/
மெட்ரோ ரயில் பணி போக்குவரத்து மாற்றம்
ADDED : பிப் 12, 2024 01:39 AM
சென்னை:மெட்ரோ ரயில் கட்டுமான பணிக்காக, அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் சாலை ரயில் நிலையப் பகுதிகளில், நேற்றில் இருந்து ஏழு நாட்களுக்கு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1சேத்துப்பட்டு பகுதியில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள், காலேஜ் சாலை, ஹாடேஸ் சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாக செல்லும் வகையில், ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
2அண்ணா மேம்பால ரயில் நிலையம் அமைய உள்ள இடத்தில் இருந்து செல்லும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வள்ளுவர்கோட்டம் வழியாக இலக்கை நோக்கி சென்றடையலாம்
3வள்ளுவர்கோட்டத்தில் இருந்து, அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர்கோட்டம் சிக்னலில் இருந்து, வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு, அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி, திருமலைப்பிள்ளை சாலை, ஜி.என்.செட்டி சாலை வழியாக சென்றடையலாம்.
பிற உட்புற சாலைகள் அனைத்தும், மேற்கண்ட ஒருவழிப்பாதை மாற்றத்திற்கு ஏற்ப போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று அறிவித்துள்ளனர்.