/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாளை ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நள்ளிரவு வரை 'மெட்ரோ' சேவை
/
நாளை ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நள்ளிரவு வரை 'மெட்ரோ' சேவை
நாளை ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நள்ளிரவு வரை 'மெட்ரோ' சேவை
நாளை ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நள்ளிரவு வரை 'மெட்ரோ' சேவை
ADDED : மார் 27, 2025 12:43 AM
சென்னை, 'ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடப்பதால், மெட்ரோ ரயில்கள் நாளை நள்ளிரவு 1:00 மணி வரை இயக்கப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னையில், சி.எஸ்.கே., பங்கேற்கும் ஐ.பி.எஸ்., கிரிக்கெட் போட்டி நடக்கும் நாளை நடக்க உள்ளது.
இதையொட்டி, போட்டி முடிந்த பின், மெட்ரோ ரயில் சேவை, 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணி வரை நீட்டிக்கப்படும்.
அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1:00 மணிக்கு, விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும்.
பயணியர் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு, 10 நிமிடங்களுக்கு முன், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வர வேண்டும்.
பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்வோர், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், வழித்தடம் மாறிக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
****