தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பி: பாதி வழியில் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில்
தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பி: பாதி வழியில் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில்
UPDATED : நவ 23, 2026 07:50 PM
ADDED : நவ 23, 2026 06:14 PM

வளசரவாக்கம்: போரூர் - வடபழனி மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பியால், பாதி வழியில் ரயில் நிறுத்தப்பட்டது.
பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோர், சமீபத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
அதேநேரம், போரூரில் இருந்து வடபழனி வரையிலான பணிகள் இன்னும் முழுமை அடையாததால், போரூரில் இருந்து நேரடியாக வடபழனி வரை, எந்த நிறுத்தங்களிலும் நிற்காமல் ரயில் சென்று வருகிறது.
இந்த நிலையில், போரூரில் இருந்து நேற்று காலை மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தபோது வளசரவாக்கம் அருகே, ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பி ஒன்று கிடந்துள்ளது. சுதாரித்த ஓட்டுநர் 'அவசர கால பிரேக்' பிடித்து, உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
இது குறித்து உடனடியாக கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தில் இருந்த இரும்பு கம்பியை அகற்றிபின், ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
போரூரில் இருந்து வடபழனி வரை தற்போது மெட்ரோ ரயில் நிறுத்தங்களுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதிலிருந்து இரும்பு கம்பி துண்டு தண்டவாளத்தில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
