/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று 80 கி.மீ., வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கி சோதனை
/
இன்று 80 கி.மீ., வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கி சோதனை
இன்று 80 கி.மீ., வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கி சோதனை
இன்று 80 கி.மீ., வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கி சோதனை
ADDED : பிப் 11, 2026 06:20 AM
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்டமாக, மூன்று வழித்தடங்களில் 116 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் நடந்து வருகின்றன.
பூந்தமல்லி - வடபழனி இடையே 16 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பாதையில், தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான குழுவினர், இன்று முதல் 13ம் தேதி வரை பல்வேறு கட்ட சோதனை நடத்துகின்றனர்.
மூன்றாவது நாளில் மெட்ரோ ரயிலை மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை நடத்துவார்.
பின்னர், மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து, ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, இந்த மாதம் இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.