ADDED : ஏப் 10, 2026 09:43 PM
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சி.எஸ்.கே., கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஐ.பி.எல்., லீக் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்காக, மெட்ரோ பயணங்களை வழங்க முன்வந்துள்ளது.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, நடக்கிறது. இப்போட்டிக்கு 'ஸ்பான்சர்' செய்யப்பட்ட ஐ.பி.எல்., டிக்கெட் வைத்திருப்போர், மெட்ரோ ரயில் நிலையங்களில் க்யூ.ஆர்., குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் 'ஸ்கேன்' செய்து, மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.
போட்டி நடக்கும் மைதானத்துக்கு அருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்துக்கு, எந்த கட்டணமுமின்றி பயணிக்கலாம்.
விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1:00 மணிக்கு, அரசினா் தோட்டம் மெட்ரோவில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
