/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ குடிநீர் குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகும் தண்ணீர்
/
மெட்ரோ குடிநீர் குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகும் தண்ணீர்
மெட்ரோ குடிநீர் குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகும் தண்ணீர்
மெட்ரோ குடிநீர் குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகும் தண்ணீர்
ADDED : செப் 03, 2025 12:31 AM

ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், மெட்ரோ குடிநீர் குழாய் உடைந்து, குடிநீர் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், மெட்ரோ குடிநீர் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பல இடங்களில், குழாய் பதித்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அதேபோல், குடிநீர் விநியோகிக்கும் போது ஏற்படும் நீர் கசிவை தவிர்க்க, தொடர் சோதனை நடந்து வருகிறது. இவ்வாறு, குடிநீர் சோதனை நடக்கும் போது, பல இடங்களில் குடிநீர் சாலையில் கொட்டி வீணாகி வருகிறது. இது குறித்து, கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆவடி அடுத்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, விவேகானந்தா நகர், ஆவடி மகளிர் காவல் நிலையம் செல்லும் சாலையில், 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
அங்குள்ள ஒரு வீட்டில், கடந்த ஒரு மாதமாக, வீடுகளில் இணைக்கப்பட்டுள்ள குழாய் உடைந்து, குடிநீர் சாலையில் வழிந்தோடி வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக, குடிநீர் விநியோகிக்கும் காலை நேரத்தில், அதிக அளவில் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு, உடைந்துள்ள குழாயை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.