ADDED : மார் 04, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
அடையாறு: மெட்ரோ ரயில்வே பணி தளத்தில், 'ஏடிஸ்' கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்ததால், ஒப்பந்த நிறுவனத்திற்கு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அடையாறு மண்டலம், 173வது வார்டு, எல்.பி., சாலையில், மெட்ரோ ரயில்வே பணி நடக்கிறது. இந்த பணித்தளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில், டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்தன.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து எச்சரித்தும், சுகாதாரமற்ற நிலையிலேயே அந்த வளாகம் இருந்துள்ளது. இதனால், பணி செய்யும் ஒப்பந்த நிறுவனத்திற்கு, 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும், இதுபோன்ற சூழல் தொடர்ந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
