/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஜி.எம். மருத்துவமனையில் மார்பக நலத்திற்கு 'கிளினிக்'
/
எம்.ஜி.எம். மருத்துவமனையில் மார்பக நலத்திற்கு 'கிளினிக்'
எம்.ஜி.எம். மருத்துவமனையில் மார்பக நலத்திற்கு 'கிளினிக்'
எம்.ஜி.எம். மருத்துவமனையில் மார்பக நலத்திற்கு 'கிளினிக்'
ADDED : ஜன 20, 2024 01:03 AM

சென்னை,எம்.ஜி.எம்., புற்றுநோய் மருத்துவமனையில், பெண்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்கும் வகையில், 'மார்பக நலத்திற்கு கிளினிக் - பி' துவக்கப்பட்டுள்ளது.
சென்னை, எம்.ஜி.எம்., புற்றுநோய் மருத்துவமனையில், 'மார்பக நலத்திற்கு கிளினிக்' என்ற பெண்களுக்கு மேம்பட்ட சிகிச்சை வழங்கும் மையத்தை, திரைப்பட இயக்குனரும், அமைச்சர் உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா திறந்து வைத்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
உடல்நல விழிப்புணர்வின் வாயிலாக பெண்கள் திறனதிகாரம் பெற செய்வது அவசியம்.
உடல்நலம் குறித்து பேசாமல், பெண்கள் ஒதுங்கி விட வேண்டாம். குறிப்பாக, சுயமார்பக பரிசோதனையை தவறாது செய்து, அசவுகரியம் உணர்ந்தால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மற்றும் புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் உர்ஜிதா ராஜகோபாலன் கூறியதாவது:
மார்பக புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தில், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுதல் அவசியம்.
அந்த வகையில், பெண்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்கும் வகையில், மார்பக நலத்திற்காக கிளினிக் - பி துவங்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து பாதிப்பு நிலைகளுக்கும் உயர் சிகிச்சையை வழங்க முடியும்.
இவ்வாறு கிருத்திகா கூறினார்.