sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

துவக்கப்படாத கட்டுமானம் எம்.ஜி.ஆர்.நகர் வாசிகள் மறியல்

/

துவக்கப்படாத கட்டுமானம் எம்.ஜி.ஆர்.நகர் வாசிகள் மறியல்

துவக்கப்படாத கட்டுமானம் எம்.ஜி.ஆர்.நகர் வாசிகள் மறியல்

துவக்கப்படாத கட்டுமானம் எம்.ஜி.ஆர்.நகர் வாசிகள் மறியல்


ADDED : மார் 21, 2024 12:45 AM

Google News

ADDED : மார் 21, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி, வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்.நகர் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்டன. இங்கு 'ஏ' முதல் 'இ - பிளாக் வரை, தலா 36 வீடுகளில், 500க்கும் மேற்பட்டோர் வசித்தனர்.

நாளடைவில் பாழடைந்த இக்கட்டடம், வாழத்தகுதியற்ற இடமாக மாறியது. இதையடுத்து கட்டடத்தை இடிக்க முடிவானது. பின், அங்கு வசித்தோருக்கு, 400 சதுரடியில் புது வீடு கட்டித்தரப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதற்காக, எம்.ஜி.ஆர்.நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிப்போர் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

கடந்த 2020ல், ஒரு வீட்டிற்கு கருணை தொகையாக 8,000 ரூபாயும், ஒதுக்கீடு ஆணையும் வழங்கப்பட்டது. பின், 2021, பிப்ரவரியில் வீடுகள் இடிக்கப்பட்டன. ஆனால், வீடுகள் இடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை கட்டுமான பணிகள் துவக்கப்படவில்லை; மனு அளித்தும் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து நேற்று, எம்.ஜி.ஆர்.நகர் குடியிருப்பில் வசித்த குடும்ப தலைவியர் 40 பேர் உட்பட, 60க்கும் மேற்பட்டோர், வியாசர்பாடி, முல்லை நகர் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால், அவர்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, மாலை விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us