தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கன்டெய்னரில் 'ஏசி' வெடித்ததால் சாலையில் சிதறிய பால் பாக்கெட்டுகள்

 கன்டெய்னரில் 'ஏசி' வெடித்ததால் சாலையில் சிதறிய பால் பாக்கெட்டுகள்

 கன்டெய்னரில் 'ஏசி' வெடித்ததால் சாலையில் சிதறிய பால் பாக்கெட்டுகள்


ADDED : பிப் 17, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 06:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அசோக் நகர்: பால் பாக்கெட்டுகளை ஏற்றிச் சென்ற சிறிய கன்டெய்னர் லாரியில், 'ஏசி' இயந்திரம் வெடித்ததால், நுாற்றுக்கணக்கான பாக்கெட்டுகள், அசோக் பில்லர் அருகே சாலையில் சிதறி விழுந்தன. அவ்வழியே சென்றோர், அவற்றை எடுத்து டப்பாக்களில் சேகரித்து தந்தனர்.

கர்நாடக மாநில அரசு நிறுவனமான 'நந்தினி' பால் பாக்கெட் லோடு ஏற்றிய லாரி, அசோக் பில்லர் சாலையில் அசோக் நகர் மெட்ரோ அருகே நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு சென்று கொண்டிருந்தது.

பால் கெட்டு போகாமல் இருக் க கன்டெய்னரில் பொருத்தப்பட்டிருந்த 'ஏசி' இயந்திரம், திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்தது. இதில், கன்டெய்னரின் இடது பக்கம் முழுதுமாக சேதமடைந்து, பால் பாக்கெட்டுகள் சா லையில் சிதறி விழுந்தன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே, அவ்வழியே சென்றோர், சாலையில் சிதறிக் கிடந்த பால் பாக்கெட்டுகளை சேகரித்து, டப்பாக்களில் அடுக்கி வைத்தனர். பின், அந்நிறுவனம் சார்பில் மாற்று லாரி வரவழைக்கப்பட்டு, பால் பாக்கெட்டுகள் அனைத்தும் எடுத்து செல்லப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us