/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மினி பஸ் டயர் வெடித்து விபத்து: 13 பேர் காயம்
/
மினி பஸ் டயர் வெடித்து விபத்து: 13 பேர் காயம்
ADDED : டிச 01, 2025 01:09 AM
குரோம்பேட்டை: மணலி மாத்துாரை சேர்ந்த யூசப், 35, என்பவருக்கு, சிட்லப்பாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி, நேற்று நடக்க இருந்தது.
இதில் பங்கேற்க யூசப் மற்றும் அவரது உறவினர்கள், 15க்கும் மேற்பட்டோர் சிற்றுந்தில், மணலியில் இருந்து சிட்லப்பாக்கம் சென்றனர். மதுரவாயல்- - தாம்பரம் பைபாஸ் சாலையில், திருநீர்மலை பகுதியை கடந்த போது, சிற்றுந்தின் முன்பக்க டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த சிற்றுந்து, சாலையோரம் கவிழ்ந்தது.
இதில், ஏழு பெண்கள் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இவர்களை சக வாகன ஓட்டிகள் மீட்டு, 108 ஆம்புலன்ஸில் குரோம்பேட்டை அரசு மருத்துவனையில் அனுமதித்தனர். இதில், யூசப், 35, சுலேகா, 25, அஸ்மா, 30, ஆகிய மூவரும், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

