/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இருமல் மருந்து தயாரிப்பு குறித்து அமைச்சர் விசாரணை
/
இருமல் மருந்து தயாரிப்பு குறித்து அமைச்சர் விசாரணை
இருமல் மருந்து தயாரிப்பு குறித்து அமைச்சர் விசாரணை
இருமல் மருந்து தயாரிப்பு குறித்து அமைச்சர் விசாரணை
ADDED : அக் 05, 2025 02:24 AM
குரோம்பேட்டை, குரோம்பேட்டையில், 'நலன் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம், நேற்று நடந்தது. இதில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயாரான இருமல் மருந்தை சாப்பிட்ட குழந்தைகள் வட மாநிலத்தில் உயிரிழந்துள்ள சம்பவத்தில், 'டிரக் கண்ட்ரோல்' அலுவலரிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பின், விரிவான தகவல் தெரிவிக்கப்படும்.
தமிழகத்தில், அவ்வகை இருமல் மருந்து விற்பனையாகி வருகிறதா என்பது குறித்தும், காலாவதியான மருந்தை உட்கொண்டதால், குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.