ADDED : ஜூன் 29, 2026 12:43 AM

அ நிறம் | அளவு
வில்லிவாக்கம்: வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் சமுதாய நல மருத்துவமனைகளில், போலியோ சொட்டு மருந்து முகாமை, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நேற்று தொடங்கி வைத்தார்.
குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிய அவர், சாக்லேட்டுகளையும் வழங்கி உற்சாகப்படுத்தினார். பின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர் களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நிகழ்ச்சி முடிவில், டில்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் மற்றும் முன்னாள் அமைச்சர் வேலு இல்லத்தில் நடந்த சோதனை தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
பொதுவாக, நிகழ்ச்சி களுக்குப் பின் நிருபர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதிலளிக்கும் அமைச்சர், இம்முறை எந்த விளக்கமும் அளிக்காமல், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
