/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
25 புதிய தாழ்தள பஸ் சேவை துவக்கினார் அமைச்சர்
/
25 புதிய தாழ்தள பஸ் சேவை துவக்கினார் அமைச்சர்
ADDED : அக் 10, 2024 12:21 AM

சென்னை, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 22.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த புதிய பேருந்துகளை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஜெர்மன் துணைத் துாதர் மைக்கேலா குச்லர் ஆகியோர், பல்லவன் இல்லத்தில் நேற்று, கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் உள்ளிட்ட அனைவரும், பேருந்தில் சிறிது துாரம் பயணம் செய்தனர்.
ஜெர்மன் துணைத் துாதர் மைக்கேலா குச்லர் பேசுகையில், ''நான் தொடர்ச்சியாக மாநகர பேருந்துகளில் பயணிக்கிறேன்.
இங்கு பெண்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இலவச பயண சேவையை, பெண்ணிய பார்வையில் பாராட்டுகிறேன்.
''மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில், தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுகின்றன. '5சி' வழித்தடத்தில் தாழ்தள பேருந்துகளை இயக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்,'' என்றார்.