sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்

/

குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்

குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்

குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்


ADDED : நவ 07, 2024 12:37 AM

Google News

ADDED : நவ 07, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போரூர், 'குளத்தில் கூட தாமரை வளரக் கூடாது' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசினார்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில், போரூர் செட்டியார் அகரம் பகுதியில், 16.60 ஏக்கர் பரப்பளவில், 12.60 கோடி ரூபாய் மதிப்பில், ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பூங்காவில் 103 இருக்கைகள், நடைபாதை, அனைத்து வகையான விளையாட்டு மைதானம், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், பார்க்கிங் மற்றும் கழிப்பறை வசதி, கடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இப்பூங்கா பணியை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு, நேற்று காலை ஆய்வு செய்தார்.

அங்கிருந்த அதிகாரிகளிடம், இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும், எப்போது பணிகள் நிறைவு பெறும் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது, அங்கிருந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் தாமரைப் பூ இருந்ததை கண்டு, 'தாமரை வளரவே கூடாது' என, அதிகாரிகளிடம் நையாண்டியாக தெரிவித்தார்.

மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, வீட்டு வசதி துறை முதன்மை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us