/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூரில் 'மினிஸ்டர் ஒயிட்' புது கிளை திறப்பு
/
திருவொற்றியூரில் 'மினிஸ்டர் ஒயிட்' புது கிளை திறப்பு
திருவொற்றியூரில் 'மினிஸ்டர் ஒயிட்' புது கிளை திறப்பு
திருவொற்றியூரில் 'மினிஸ்டர் ஒயிட்' புது கிளை திறப்பு
ADDED : செப் 26, 2025 11:46 PM

சென்னை : திருவொற்றியூரில், 'மினிஸ்டர் ஒயிட்'டின் புது ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
'ஓட்டோ க்ளோத்திங்' நிறுவனத்தின் பிராண்டாக திகழும், ஆண்களுக்கான பிரத்யேக ஆடைகளுக்கு புகழ்பெற்ற 'மினிஸ்டர் ஒயிட்' நிறுவனம், சென்னையில் தன் ஆறாவது ஷோரூமை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, டோல்கேட் ரயில் நிலையம் அருகில் திறந்துள்ளது. இதை, ஓட்டோ க்ளாத்திங் நிர்வாக இயக்குநர் எஸ்.போத்திராஜ் திறந்து வைத்தார்.
பின் அவர் கூறியதாவது:
நாட்டில் 56வது மற்றும் சென்னையின் ஆறாவது கிளை இங்கு திறக்கப்பட்டுள்ளது. நாங்கள், 'பிளக்சிவய்ஸ்ட்' என்ற வேட்டி - சட்டைகளை அறிமுகம் செய்து, அதை திருமணம், திருவிழாக்கள், அலுவலக விசேஷங்களில் ஆண்கள் உடுத்தும் வகையில் பிரபலம் செய்துள்ளோம்.
மேலும் வலுசேர்க்கும் வகையில், பாரம்பரியம் மிக்க திருவொற்றியூர் பகுதியில் இந்த கிளை திறக்கப்பட்டுள்ளது.
இங்கு, பருத்தி, லினன் சட்டைகள், பருத்தி, பட்டு வேட்டிகள், பஞ்சகஜம் உள்ளிட்ட மத அடையாள வேட்டிகள், வண்ணம், டிஷ்யூ, ஆர்ட் சில்க், திருவியா குர்தாக்கள், காம்போ வேட்டிகள், குழந்தைகளுக்கான பாரம்பரிய உடைகள் உள்ளிட்டவை, வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், 'மினிஸ்டர் ஒயிட்' நிறுவன தலைமை வணிக அதிகாரி சுரேஷ் ராமசுப்பிரமணியம் உ ள்ளிட்டோர் பங்கேற்றனர்.