/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடற்பயிற்சி கூடத்தில் அமைச்சர் விழிப்புணர்வு
/
உடற்பயிற்சி கூடத்தில் அமைச்சர் விழிப்புணர்வு
ADDED : மார் 22, 2025 12:28 AM

வேளச்சேரி, அடையாறு மண்டலம், 176வது வார்டு கவுன்சிலர் மேம்பாட்டு நிதி 75 லட்சம் ரூபாய் செலவில், வேளச்சேரி, ஆண்டாள் நகரில், உடற்பயிற்சி கூடம் திறப்பு மற்றும் அங்கன்வாடி மையம் அடிக்கல் நாட்டு விழா, நேற்று முன்தினம் நடந்தது.
இதில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று, உடற்பயிற்சி செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு, 176வது வார்டு கவுன்சிலர் ஆனந்தம் தலைமை வகித்தார்.
மண்டலக்குழு தலைவர் துரைராஜ், கவுன்சிலர் பாஸ்கரன், தி.மு.க., பகுதி செயலர் சேகர் மற்றும் நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, ரமேஷ், ஜெகதீசன், தாமோதரன், மதிவாணன், முருகவேல், பார்த்திபன், பாலசதீஷ், கோபி, பாரதிதாசன், சக்திவேல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.