/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆரில் ஐஸ் பேக்டரி, மீன் ஏல கூடாரம் குறைகேட்பு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி
/
இ.சி.ஆரில் ஐஸ் பேக்டரி, மீன் ஏல கூடாரம் குறைகேட்பு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி
இ.சி.ஆரில் ஐஸ் பேக்டரி, மீன் ஏல கூடாரம் குறைகேட்பு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி
இ.சி.ஆரில் ஐஸ் பேக்டரி, மீன் ஏல கூடாரம் குறைகேட்பு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி
ADDED : டிச 18, 2024 12:20 AM

சென்னை, சென்னை, பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் முதல் இ.சி.ஆர்., நைனார்குப்பம் வரை, 15 கி.மீ., துாரத்தில், 13 மீனவ குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின் குறை கேட்பு கூட்டம், நேற்று இ.சி.ஆர்., அக்கரையில் நடந்தது.
அதில், மீனவர்கள் பேசியதாவது:
புயல், மழையால் சேதமான சாலைகளை சீரமைக்கவில்லை. மின் கம்பியால் விபத்துகள் நடப்பதால், நிலத்தடியில் கேபிள் புதைக்க வேண்டும். நீலாங்கரையில் ஐஸ் பேக்டரி அமைத்து தர வேண்டும்.
இ.சி.ஆரை கடந்து ரேஷன் பொருள் வாங்க வேண்டி உள்ளதால், சாலையின் கிழக்கு திசையில் ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும்.
துாண்டில் வளைவு, வலை பின்னவும், வலை உலர்த்தவும் கூடம், மீன் ஏலமிடும் கூடாரம் அமைக்க வேண்டும். மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு இணைப்பு வழங்க வேண்டும். வீட்டு மனை பட்டா வேண்டும்.
இவ்வாறு அவர்கள் முறையிட்டனர்.
இதற்கு, அமைச்சர்கள் சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பதில் விபரம்:
இந்த பகுதியில் உள்ள 13 மீனவ குடியிருப்புகளுக்கும், 15 நாட்களுக்குள் அதிகாரிகள் நேரடியாக வருவர். அப்போது, உடனடியாக செய்ய முடிந்த கோரிக்கைளை, உடனே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளோம்.
பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி, கடற்கரை பகுதியில் நிரந்தர கட்டமைப்பு அமைக்க முடியாது. சட்டத்திற்கு உட்பட்டு, இரும்பு துாண்கள் பயன்படுத்தி, கூடாரம் அமைத்து, மீன்வலை உலர்த்த வழிவகை செய்யப்படும். இடம் கிடைத்ததும், ஐஸ் பேக்டரி, ஏல கூடாரம் அமைத்து தரப்படும்.
பட்டா அல்லாத இடங்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்க நீதிமன்ற தடை உள்ளதால், 'சப் மீட்டர்' வழங்க அறிவுறுத்தி உள்ளோம். கடற்கரையோர கடைகளை முறைப்படுத்த மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிகழ்ச்சியில், மீன்வளத்துறை இயக்குனர் கெஜலட்சுமி, மாநகராட்சி இணை கமிஷனர் அமித், எம்.எல்.ஏ.,க்கள் அரவிந்த் ரமேஷ், ஹசன் மவுலானா, கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.