/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால்வாய் மேல் மூடி மாயம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
/
வடிகால்வாய் மேல் மூடி மாயம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
வடிகால்வாய் மேல் மூடி மாயம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
வடிகால்வாய் மேல் மூடி மாயம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
ADDED : அக் 28, 2025 12:56 AM

எண்ணுார்: வடிகால்வாய் தொட்டியின் மேல் மூடி மாயமாகி உள்ளதால், பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
திருவொற்றியூர் மண்டலம் முழுதும், 100 கி.மீ., துாரத்திற்கு, கொசஸ்தலை வடிநில திட்டத்தின் கீழ், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 3வது வார்டு, கத்திவாக்கம் மேம்பாலத்தின் கீழ், இருபக்க அணுகு சாலையிலும், மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், 20க்கும் மேற்பட்ட இடங்களில், வடிகால் தொட்டியின் வடிகட்டிகள் மாயமாகி உள்ளன. இதன் காரணமாக, அந்த இடம் பள்ளமாக உள்ளது.
இதனால், குப்பை கழிவுகளுடன் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழை நீர் வடிகாலுக்குள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல், வாகன ஓட்டிகள் சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமுறுகின்றனர்.
இதே நிலை நீடித்தால், கனமழையின் போது, வடிகாலுக்குள் மழை நீர் செல்லாமல், சாலையில் தேங்கி போக்குவரத்து பாதிக்கும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து,
விடுபட்ட இடங்களில், மழை நீர் வடிகால் தொட்டிக்கான வடிகட்டிகளை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

