ADDED : அக் 26, 2026 07:51 PM
செம்மஞ்சேரி: நடிகர் தனுஷ் பங்கேற்ற நிகழ்ச்சியில், பெண் நிர்வாகி தவறவிட்ட மொபைல் போனை, ‘லொகேஷன்’ மூலம் போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.
செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லுாரியில் நேற்று (அக்.,25) நடிகர் தனுஷ், நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில் பங்கேற்க, சிவகாசியில் இருந்து ஜோதீஸ்வரி, 26, என்பவர் வந்திருந்தார். கூட்டத்தில், அவரது மொபைல் போன் காணாமல் போனது.
இது குறித்த புகாரை அடுத்து, செம்மஞ்சேரி போலீசார் ‘லொகேஷன்’ மூலம் தேடியபோது, கல்லுாரி வளாகத்தில் சமையல் பணியில் இருந்த வடமாநில வாலிபர் ஒருவர் மொபைல் போனை எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. ‘பாஸ்வேர்டு’ காரணமாக அவரால் போனை, ‘சுவிட்ச் ஆப்’ செய்ய முயன்றும் முடியவில்லை. இதையடுத்து, போலீசார் போனை மீட்டு ஜோதீஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.
