ADDED : அக் 17, 2026 10:05 PM

அ நிறம் | அளவு
பழைய வண்ணாரப்பேட்டை, பி.பி.கே., தெருவில், புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அங்கு வந்த ராயபுரம் எம்.எல்.ஏ., விஜய் தாமுவை, அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
‘மின் தடை குறித்து தகவல் தெரிவிக்க, மொபைல் போனில் தொடர்பு கொண்டால், அழைப்பை ஏற்காதது ஏன்’ என, கேள்வி எழுப்பினர்.
அதற்கு விஜய் தாமு, ‘அலுவலகத்துக்கு வாருங்கள்’ என்றார். பின், தொடர்ந்து வாக்குவாதம் செய்தால் எப்படி என்னால் பதில் கூற முடியும்’ என, அவர் கேள்வி எழுப்பிவிட்டு, அங்கிருந்து வேகமாக சென்றார். அப்போது, எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள், பொதுமக்களிடம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
