/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனியில் ரூ.2.60 கோடி பணிகள்: எம்.எல்.ஏ., பெருமிதம்
/
வடபழனியில் ரூ.2.60 கோடி பணிகள்: எம்.எல்.ஏ., பெருமிதம்
வடபழனியில் ரூ.2.60 கோடி பணிகள்: எம்.எல்.ஏ., பெருமிதம்
வடபழனியில் ரூ.2.60 கோடி பணிகள்: எம்.எல்.ஏ., பெருமிதம்
ADDED : டிச 29, 2024 12:24 AM

வடபழனி, டிச. 29-
சென்னை தென்மேற்கு மாவட்டம், தி.நகர் கிழக்கு பகுதி, 130வது வட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, 'ஏன் வேண்டும் தி.மு.க.,' என்ற தலைப்பில் விளக்க உரை கூட்டம், வடபழனி குமரன் காலனியில் நேற்று நடந்தது.
இதில், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், கட்சியின் மாவட்ட செயலரும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வுமான வேலு, மேற்கு பகுதி செயலர் ஏழுமலை, 130வது வார்டு கவுன்சிலர் பாஸ்கர், 130வது வட்ட செயலர் தட்சன் ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசியதாவது:
வடபழனி பகுதியில் மட்டுமே, எம்.எல்.ஏ., நிதியிலிருந்து 2.60 கோடி ரூபாய்க்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 30 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.