sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏரி நீர் திறப்பு குறித்து தெரிவிக்கவில்லை அதிகாரியை வசைபாடிய எம்.எல்.ஏ., செம்பரம்பாக்கத்தில் சலசலப்பு

/

ஏரி நீர் திறப்பு குறித்து தெரிவிக்கவில்லை அதிகாரியை வசைபாடிய எம்.எல்.ஏ., செம்பரம்பாக்கத்தில் சலசலப்பு

ஏரி நீர் திறப்பு குறித்து தெரிவிக்கவில்லை அதிகாரியை வசைபாடிய எம்.எல்.ஏ., செம்பரம்பாக்கத்தில் சலசலப்பு

ஏரி நீர் திறப்பு குறித்து தெரிவிக்கவில்லை அதிகாரியை வசைபாடிய எம்.எல்.ஏ., செம்பரம்பாக்கத்தில் சலசலப்பு


ADDED : அக் 23, 2025 12:36 AM

Google News

ADDED : அக் 23, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: ''செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறக்கப்பட்டது தொடர்பாக, தகவல் ஏதும் சொல்லவில்லை,'' என, ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை அதிகாரிகளை வசைபாடியது, சலசலப்பை ஏற்படுத்தியது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100 கன அடி நீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி, நீர்மட்டம் 20.84 அடியாகவும், கொள்ளளவு, 2.81 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. நீர்வரத்து, 2170 கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும், நீர்மட்டம் 21 அடியை நெருங்குவதாலும், கூடுதலாக உபரி நீர் திறக்க அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

500 கன அடி நீர் திறப்பு இதையடுத்து, நேற்று ஏரியின் ஐந்து கண் மதகில், மூன்று செட்டர்கள் வழியாக, 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.

மேலும், ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், உபரி நீர் கூடுதலாக திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு குன்றத்துார், திருமுடிவாக்கம் என, இரண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவதால், எல்லை பிரச்னையால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.

இதனால், ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை பார்ப்பதற்கு, ஏராளமான பொதுமக்கள் ஆபத்தை உணராமல், மதகின் அருகே நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.

சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ.,வும் காங்., மாநில தலைவருமான செல்வபெருந்தகை, அதிகாரிகளுடன் சேர்ந்து, நேற்று ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.

ஜாதி வெறி ஆய்வுகளை முடித்த பின், பொதுப்பணித் துறை அதிகாரி தனசேகரனை, 'மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் தண்ணீரை திறந்து விடுகிறீர்கள்; நீங்களே மக்கள் பிரதிநிதியாகி விட்டால் எதற்கு அரசு.

இவர்களெல்லாம் தண்ணீரை திறக்கக்கூடாது, தொடக்கூடாது என நினைக்கிறீர்கள். அங்கு ஒரு அயோக்கிய அதிகாரி அமர்ந்திருக்கிறார், எப்போது தான் இந்த ஜாதி வெறியில் இருந்து மீண்டு வரப்போகிறோமோ' என, வசைபாடி சென்றார்.

இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us