தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயில்வே சுவர் விழுந்து எம்.எல்.ஏ., உறவினர் பலி

ரயில்வே சுவர் விழுந்து எம்.எல்.ஏ., உறவினர் பலி

ரயில்வே சுவர் விழுந்து எம்.எல்.ஏ., உறவினர் பலி


ADDED : செப் 30, 2024 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 12:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செம்பியம், கொடுங்கையூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன், 40. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பெரம்பூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சேகரின் மைத்துனன்.

நேற்று முன்தினம் மாலை, பெரம்பூர் ரயில் நிலையத்தின் வெளியே சுற்றுச்சுவர் அருகே, சிறுநீர் கழித்து கொண்டிருந்தார்.

அப்போது, 10 அடி நீளம் சுற்றுச்சுவர், திடீரென அவர் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில், தலை மற்றும் வலது காலில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

சம்பவத்தன்று, பெரம்பூர் ரயில்வே தண்டவாளத்தில், பராமரிப்பு பணி நடந்து வருகிறது. அப்பணியின்போது, பழைய சுற்றுச்சுவரை ஒட்டி கொட்டப்பட்டிருந்த மண், கட்டட கழிவுகள் அகற்றப்பட்டன.

இந்த சுவரின் அடிமட்டத்தில் பிடிமானம் இல்லாமல் இருந்த நிலையில், மண் அகற்றப்பட்டதால், சுவர் சரிந்து பாலமுருகன் மீது விழுந்துள்ளது. செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us