/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நேபாள வாலிபரிடம் மொபைல்போன் பறிப்பு
/
நேபாள வாலிபரிடம் மொபைல்போன் பறிப்பு
ADDED : அக் 14, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பியம்:நேபாளம், தனுஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்வான் சதா, 28. வேளச்சேரியில் உள்ள காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு செல்வதற்காக, பெரம்பூர் ரயில் நிலையம் வந்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த மர்ம நபர்கள், டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாகக் கூறி, பெரம்பூர் நெடுஞ்சாலை அழைத்துச் சென்று, அவரிடம் இருந்த 13,000 ரூபாய் மதிப்புள்ள 'ரெட்மி' மொபைல்போன், 2,000 ரூபாய் ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனர்.
செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.