/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொபைல் போன் கடைக்காரர் வாடிக்கையாளர் இடையே 'குஸ்தி'
/
மொபைல் போன் கடைக்காரர் வாடிக்கையாளர் இடையே 'குஸ்தி'
மொபைல் போன் கடைக்காரர் வாடிக்கையாளர் இடையே 'குஸ்தி'
மொபைல் போன் கடைக்காரர் வாடிக்கையாளர் இடையே 'குஸ்தி'
ADDED : ஆக 27, 2025 11:55 PM
பெரம்பூர், மொபைல் போன் பழுது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
வடசென்னை அ.தி.மு.க., மாவட்ட செயலர் வி.எஸ்.பாபுவின் பேரனான பெரம்பூரைச் சேர்ந்த சக்திவேல், 27, இவர், தன் 'ஐபோன் - 14 ப்ரோ' மொபைல் போனை பழுது பார்க்க, பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் கடை வைத்துள்ள தவுசிப், 38, என்பவரிடம் கடந்த 24ம் தேதி கொடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வந்து வாங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால், 'போனை சரிசெய்ய முடியவில்லை' எனக்கூறிய தவுசிப், மொபைல் போனை திருப்பி கொடுத்துள்ளார்.
ஆனால், மொபைல் போனை வாங்கி பார்த்த சக்திவேல், அதன் கேமரா மாற்றப்பட்டுள்ளது குறித்து கேட்டுள்ளார்.
இது குறித்த தகராறில் இருதரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. இதில் காயமடைந்த சக்திவேல், பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது குறித்து சக்திவேல், செம்பியம் காவல் நிலையத்தில் தவுசிப் மீது புகார் அளித்தார்.
அதேபோல தவுசிப்பும், சக்திவேல் தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.
இருதரப்பு புகார் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.