/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாடிய வாலிபரின் மொபைல்போன் திருட்டு
/
விளையாடிய வாலிபரின் மொபைல்போன் திருட்டு
ADDED : ஜன 19, 2025 09:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, கிரே நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் கீர்த்தி ராஜா, 18; எம்.ஜி.ஆர்., பல்கலையில், பி.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் புளியந்தோப்பு, கே.பி., பார்க் பகுதியில் உள்ள மைதானத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.
மைதானத்தின் ஒரு பகுதியில், 20,000 ரூபாய் மதிப்புடைய மொபைல்போன், கை பையை வைத்து கால்பந்து விளையாடியுள்ளார். ஒரு மணி நேரம் கழித்து வந்த பார்த்த போது, அவரது மொபைல்போன் திருடுபோனது தெரிந்தது. பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' காட்சிகளை வைத்து, மொபைல் போன் திருடிய நபரை தேடி வருகின்றனர்.