ADDED : செப் 30, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிக்கரணை, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுவேதா, 23. பள்ளிக்கரணை, காமகோடி நகரில் உள்ள சூர்யா பெண்கள் விடுதியில் தங்கி, அதே பகுதி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பணி முடித்து, தங்கும் விடுதிக்கு, சாலையில் நடந்து சென்றார்.
என்.ஐ.ஓ.டி., பேருந்து நிறுத்தம் அருகே, பின்னால் வந்த மர்ம நபர், சுவேதாவின் கையிலிருந்த, 'விவோ' நிறுவன மொபைல் போனை பறித்து, அங்கிருந்து தப்பித்தார்.
சுவேதா புகாரின்படி, பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.