ADDED : ஏப் 10, 2025 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, புரசைவாக்கம், வெங்கடசாமி தெருவைச் சேர்ந்தவர் மோகன் ஜோசப், 44. எழும்பூர் ரயில் நிலைய வடக்கு ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
நேற்று முன்தினம் வடமாநில பயணி ஒருவரை ஏற்றி சென்றார். அதே ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் ராஜசேகர் மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில் அருகே தன்னை இறக்கி விடும் படி கூறி ஆட்டோவில் ஏறினார்.
மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்ததும் வடமாநில பயணியின் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல்போனை பறித்துச் சென்று தப்பினார்.
இதுகுறித்து ஜோசப் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், மொபைல் போனை பறித்துச் சென்ற பல்லவன் சாலை காந்தி நகரைச் சேர்ந்த ராஜசேகர், 35 என்பவரை நேற்று கைது செய்தனர்.

