ADDED : ஜூன் 22, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூக்கடை,பெரம்பலுாரைச் சேர்ந்தவர் வேலு, 46. இவர், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிகிறார். கடந்த 18ம் தேதி இரவு, ஹோட்டலின் வெளியே மொபைல்போனில் பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த இருவர், வேலுவை தாக்கி, மொபைல் போனை பறித்து சென்றனர்.
பூக்கடை போலீசாரின் விசாரணையில், புளியந்தோப்பு, காந்தி நகரைச் சேர்ந்த பரத், 20, அஜய்குமார், 20, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.

