/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடுத்தடுத்து நால்வரிடம் மொபைல்போன் பறிப்பு
/
அடுத்தடுத்து நால்வரிடம் மொபைல்போன் பறிப்பு
ADDED : பிப் 24, 2024 12:05 AM
அசோக் நகர்,
சென்னை, எம்.ஜி.ஆர்., நகர், வ.உ.சி., தெருவைச் சேர்ந்த துரித உணவக உரிமையாளர் பிரவீன், 24.
இவர் நேற்று அதிகாலை, கே.கே.நகர் முனுசாமி சாலையில், பைக்கில் அமர்ந்து மொபைல்போனில் பேசியுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், பிரவீனின் மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதேபோல அசோக்நகர், 100 அடி சாலையில், சுப்புராஜ் என்பவரிடம் மொபைல்போன் பறிக்கப்பட்டது. கே.கே.நகர், லட்சுமணன் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட துரை என்ற முதியவரிடமும் மொபைல்போன் பறிக்கப்பட்டது.
அதே பகுதி ஆர்.கே.சண்முகம் சாலையில் செங்குட்டுவன், 29, என்பவரிடமும் மொபைல்போன் பறிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.