/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்சூரன்ஸ் பாலிசி எனக்கூறி ரூ.1.65 லட்சம் நுாதன மோசடி
/
இன்சூரன்ஸ் பாலிசி எனக்கூறி ரூ.1.65 லட்சம் நுாதன மோசடி
இன்சூரன்ஸ் பாலிசி எனக்கூறி ரூ.1.65 லட்சம் நுாதன மோசடி
இன்சூரன்ஸ் பாலிசி எனக்கூறி ரூ.1.65 லட்சம் நுாதன மோசடி
ADDED : மே 21, 2025 12:50 AM
வியாசர்பாடி :வியாசர்பாடி, வியாசர் நகரை சேர்ந்தவர் வந்தனா, 43. கடந்த ஏப்., 25ம் தேதியன்று, இவரது மொபைல் போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசியவர், எச்.டி.எப்.சி., எரிகோ ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், நீங்கள் வைத்துள்ள பாலிசி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுத்ததாகவும், பாலிசி தொகையை முறையாக கட்டாததால், வங்கி வாயிலாக, ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 999 ரூபாய், பாலிசி தொகை கட்டப்பட்டுள்ளது.
வங்கி கட்டிய பாலிசி தொகையை. கண்டிப்பாக கட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, தனது இன்சூரன்ஸ் பாலிசியை கேன்சல் செய்வதாக, வந்தனா கூறியுள்ளார்.
அதற்கு அந்த மர்ம நபர், இன்சூரன்ஸ் பாலிசியை கேன்சல் செய்ய வேண்டுமென்றால், எச்.டி.எப்.சி., கிரெடிட் கார்டு எண்ணை கொடுக்குமாறும், அப்போது தான், இன்சூரன்ஸ் பாலிசியை கேன்சல் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய வந்தனா, தன் எச்.டி.எப்.சி., கிரெடிட் கார்டின் எண்ணை கொடுத்துள்ளார். உடனே, ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 200 ரூபாய், அவரது கார்டில் இருந்து எடுக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த வந்தனா, இதுகுறித்து நேற்று வியாசர்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிந்த போலீசார், அதுகுறித்து விசாரிக்கின்றனர்.