/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நவீன 'நியூ-ஜென்' அஞ்சலகம் ஐ.ஐ.டி., வளாகத்தில் திறப்பு
/
நவீன 'நியூ-ஜென்' அஞ்சலகம் ஐ.ஐ.டி., வளாகத்தில் திறப்பு
நவீன 'நியூ-ஜென்' அஞ்சலகம் ஐ.ஐ.டி., வளாகத்தில் திறப்பு
நவீன 'நியூ-ஜென்' அஞ்சலகம் ஐ.ஐ.டி., வளாகத்தில் திறப்பு
ADDED : ஜன 20, 2026 05:36 AM

சென்னை: ஐ.ஐ.டி., வளாகத்தில், நவீன வசதிகளுடன் கூடிய 'நியூ-ஜென்' அஞ்சலகம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் அமைந்துளள துணை அஞ்சலகம், மாணவர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப, 'என்-ஜென்' எனும் 'நியூ ஜெனரேஷன்' அஞ்சலகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலவச வைபை, புத்தகங்கள், பல - கை விளையாட்டுகள், சார்ஜிங் போர்டுகள் மற்றும் பல்வேறு கூடுதல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அந்த நவீன அஞ்சலகத்தை, சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் காமகோடி நேற்று துவங்கி வைத்து பேசியதாவது:
இந்தியாவில், செல்ல முடியாத இடங்களுக்கு எல்லாம் தபால் அனுப்ப வேண்டும் எனில், விரைவு அஞ்சல் தவிர வழியில்லை. இது, சாதாரண அஞ்சலகங்கள் போல் இல்லாமல், இளைஞர்களை கவரும் வகையில், குளிரூட்டப்பட்ட அறையுடன் கூடிய அலுவலகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கல்வி நிறுவனங்களில், இது போன்ற தபால் நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஐ.ஐ.டி., பேராசிரியர்களால் நடத்தப்படும் 'கல்வி சக்தி' திட்டத்தை, கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டு வருகிறோம்.
இதற்காக, இணைய வசதியுடன் கூடிய, 'ஸ்மார்ட் டிவி' கிராமப்புற அஞ்சலகங்களில் அமைத்து தரவேண்டும். அதன் வாயிலாக, ஐ.ஐ.டி., பாடத்திட்டங்கள், கிராமப்புற மாணவர்களுக்கும் சென்றடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.

